நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 28 June 2017

மணிமேகலை.14

சூரியனைப் போல ஒளியுடைய அழகிய குழந்தை அது  அருகில் யாருமில்லை. பூங்கோதை ஓடிச் சென்று வாரி எடுத்தாள். குழந்தையற்ற அவர்களுக்குக் கடவுள் தந்த பரிசு. சாலை விடிந்தவுடன் இளபூதி விசாரித்தான். குழந்தையை யாரும் உரிமை கொண்டாடவில்லை.
மாட்டுத் தொழுவத்தில் கிடைத்த அவனுக்குத் தாய்ப்பால் எங்கிருந்து கிடைக்கும்? பசுவின் பாலைக் கொடுத்து வளர்த்தார்கள். பசு வளர்த்த பிள்ளையானான். ஆபுத்திரன் ஆனான்.

மணிமேகலை 13

மணிமேகலை அறவண அடிகளை கைகூப்பி வணங்கினாள் .பின் பணிந்து அடிகளின் அடி தொழுதாள். மாதவியின் கையிலிருந்த அமுதசுரபியை அவருக்கு முன்னால்   வைத்து  மீண்டும் தொழுது நின்றாள். பின் மணிமேகலை தனக்கு நடந்தவற்றையெல்லாம் அடிகளிடம் கூறினாள் . 

அவர்  அமுதசுரபியைக் கையில் எடுத்துப் பார்த்தார். கண்மூடி நெடுநேரம் தியானத்தில் இருப்பது போல் அமர்ந்திருந்தார்
பின்னர் கண்விழித்து மணிமேகலையிடம் ‘இது ஆபுத்திரனுடையது’ என்றார்.

ஆபுத்திரனா யார் அவர்பெயரே புதுமையாக இருக்கிறதே. அவருக்கு எப்படிக் கிடைத்தது அடிகளே?’ 

வடநாட்டைச் சேர்ந்த சாலியின் மகன் . . . . . . . ’ 

மணிமேகலை 12

மணமேகலா தெய்வம் மறைந்தது. 
உடனே மணிமேகலை ஒருவிதத்தெளிவுக்கு மீண்டாள். மீண்டும் ஒருமுறை    மணிபல்லவத்தீவினைச்சுற்றிப்பார்க்க தோன்றியது.  தீவினை மணிமேகலை சுற்றி வந்தாள். அப்போது  திடீரென்று  வானிலிருந்து இறங்கியது போல்அவள்முன் ஒருபெண் தோன்றினாள்.

மணிமேகலை 11

மணிமேகலை புத்த கடிகையின் முன் வந்து அமர்ந்தாள். மாதவி கூறிய புத்தரின் ஆசை பற்றிய கருத்து மனதில் எழுந்தது.

இந்த உலகில் வளமான மக்கள் ஒரு புறம். வளம்  என்பதையே அறியாத மக்கள் மறு புறம். பசித்துன்பம் ஏன் ஏற்படுகிறது? மக்கள் உழைக்காததினாலா அல்லது அவர்கள் உழைப்பை பலர் சுரண்டுவதினாலா? புகார் தான் எவ்வளவு வளமான தலை நகரம்

மணிமேகலை.10

விடை தெரியாத  கேள்விகளுடன் மணிமேகலை மீண்டும் கடற்கரையை அடைந்தாள் இது தன் சென்ற பிறவியின் கதையா? வரும் பிறவியின் கதையா?
அலைகள் வருவதும் போவதுமான காட்சி பிறவியை நினைவூட்டியதுநடந்தபடியே பிறவிகளின் காரணத்தை சிந்தித்தாள்.
இராகுலன் என்ன ஆனான்?’

மணிமேகலை9

மிக அழகிய ஒரு மாளிகையில் பட்டாடை உடுத்தி, நகைகள் அணிந்து ஒரு அரசிக்குரிய தோரணையுடன் மணிமேகலை தன் தோழியரோடு உரையாடிக் கொண்டிருந்தாள்.
‘மன்னர் வரும் வேளையாயிற்று. சரி எல்லோரும் புறப்படுங்கள்‘ என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே மன்னன் தோரணையில் அவள் கணவன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.
‘இலட்சுமி‘ என்றழைத்தபடி, உள்ளே வந்து கொண்டிருந்தான்.
மணிமேகலை திகைத்தாள்.

மணிமேகலை :8

ருட்டில் ஒன்றும் தெரியவில்லை. தட்டுத்தடுமாறி கைகளைச்சுற்றித் தடவிப்பார்த்தாள். காலை ஒரு மரத்தின் விழுதுகள் பிணைத்திருந்தன

இருகைகளாலும் அவற்றின் பிணைப்பிலிருந்து விடுபட்டு விழுதுகளை விலக்கிக்கொண்டு  வெளியே வந்தாள். 

மணிமேகலை 7

ணிமேகலை கடற்கரையில் பலவிதமான நண்டுகள் ஓடுவதும், வளையில் ஒளிவதுமாக இருப்பதைப் பார்த்தாள். அவளுக்குச் சிறுவயதில் விளையாட்டு நினைவிற்கு வந்தது.
தன் தந்தையுடன் ஐந்து வயது சிறுமியாக இருந்தபோது தேரில் ஏறி, கடற்கரைக்குச் சென்றதை நினைத்துக் கொண்டாள்

மணிமேகலை .6

ணிமேகலை தனக்குள்  வினாக்கள் வினாக்களாகக்  கேட்டுக்  கொண்டாள்.
 ‘இப்போது எதற்காக அவர்களை நினைத்து நான் அச்சப்பட வேண்டும். எப்போதோ நடந்த சம்பவம். செவி வழியாக காலம் காலமாக வழங்கி வருகிறது. நான் பயப்பட மாட்டேன். 
 இங்கு மனிதர்களே தென்படவில்லையே.

மணிமேகலை 5

5.மணிமேகலை 
மணிமேகலைக்குள் ஏனோ விசாகை நினைவு வந்தது விசாகை தன் கற்பை நிருபிக்க போராடிய ஒருத்தி
தன் தோழியரோடு அருவியில் நீராடிவிட்டு விசாகை திரும்பிக் கொண்டிருந்தாள். ஊர் அம்பலத்தே இரு பெண்கள் அவளைச் சாடை காட்டிப் பேசியதை அவள் தற்செயலாகப் பார்த்து விட்டாள்

மணிமேகலை 4

சமூகத்தின் நிலை.. அதை நினைத்து மணிமேகலையின் இதழில் விரக்திச் சிரிப்பொன்று எழுந்தது. ஆணுக்கு ஒரு நீதி! பெண்ணுக்கு ஒரு நீதி! கண்ணுக்குத் தெரிந்த அநீதிகளின் தொகுதியை அரங்கேற்றி ஆடவிட்டிருக்கும் இதற்குப் பெயர் சமூகமா?
அமர்ந்து அமர்ந்து சலித்ததில் ஒரு களைப்பை உணர்ந்தாள்.

மணிமேகலை-3


உதயகுமரன், சுதமதியின் தைரியத்தைப் பார்த்து வியந்தான். ஏனெனில் கணிகையர் குலத்தைச் சார்ந்த பெண்கள், அன்னிய ஆண்களிடம் பசப்பு வார்த்தைகளைப் பேசுவார்கள். ஆண்களைக் கவருவதிலேயே குறியாக இருப்பார்கள். ஆண்களுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ள கண்களால் மயக்குவார்கள். கொஞ்சி கொஞ்சிப் பேசுவார்கள். இவ்வாறு தான் அவன் கணித்து வந்திருக்கிறான் .

மணிமேகலைநாவல் 2

மணிமேகலைநாவல் 2
லைகுனிந்தபடி அமர்ந்திருந்த மாதவியை வயந்தமாலை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பேரழகை மட்டுமல்ல. சிற்பத்திலே செதுக்கியது போன்ற அந்த முகத்தை மட்டுமல்ல. செழித்து அடர்ந்து நீண்ட கரும்பாம்பு போன்ற அந்த கூந்தலை கண்கொட்டாமல் பார்த்தாள்  அழகான சுருண்ட கூந்தல் மாதவியினுடையது. கோவலன் உடனிருக்கும்போது மாதவி மலர்களைச் சூடாத நாள்களே கிடையாது. அந்தக் கூந்தலோடு கோவலன் தொட்டுத்தடவிக் கொஞ்சி இழைந்து எத்தனை நாள் விளையாடி இருக்கிறான்! வயந்தமாலை வருகிறாள் என்று உணர்ந்து அவன் கையைத் தட்டி விட்டு மாதவி எப்படி நாணி இருக்கிறாள்! அவன் வேண்டுமென்றே வயந்தமாலை எதிரில், அவள் பார்க்க அந்தக் கூந்தலைத் தன் கரங்களால் குறும்புப் பார்வையோடு சாண் போட்டு அளந்திருக்கிறான் . 

மணிமேகலை நாவல் 1

1 மணிமேகலைநாவல்
----------------------------------------
[‘பெண்களின் மொழிக்கு ஒரு எல்லை வகுத்திருக்கிறது இந்த உலகம்]
மணிமேகலை துயிலெழுந்தாள்
எழும்போதே  ஏதோ மாற்றம் உணர்ந்தாள் 
.
படுத்திருப்பது, தான் வழக்கமாகத் துயிலும் பட்டுப் பஞ்சணையில்  அல்ல. மணற்பரப்பு . அதுவும் சில்லிட்ட இரவின் பனி யினால் சில்லென்று இருந்தது. உடம்பு சில்லிட்டிருந்தது. உறக்கத்தின்  இருள் கண்களை மூடவே கைகளால் துழாவிப் பார்த்தாள்

தற்காலப்பேச்சுத் தமிழும் தொல்காப்பியமும்



தற்காலப்பேச்சுத் தமிழும் தொல்காப்பியமும்


ஆறு, கரை இல்லையென்றால் வறண்டு போய்விடும். அதுபோல் இலக்கணம் இல்லையென்றால் மொழியும் அழிந்து விடும். இலக்கணம் மொழிக்கு முதுகெலும்பு போன்றது. உறுதியான கட்டமைப்போடு இருக்க வேண்டும் இல்லையெனில் மொழி நிற்க முடியாது. காலம் கடந்து வென்று பீடுநடைபோட்டு நடக்க முடியாது. பயிரைக் காக்கின்ற வேலி போன்றது மொழியைக் காக்கின்ற இலக்கணங்கள். அவ்வகையில் தமிழுக்குக் கிடைத்துள்ள, உலகின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழை முன்னைப் பழமைக்கும் பழமையாகவும், புதுமைக்கும் புதுமையாகவும் காத்து நிற்கிறது. தமிழ்மொழியில் தொடார்ந்து இலக்கண நூல்கள் தோன்றிப் பெருகி வருகின்றன. பிற்கால இலக்கண நூல்களின் வளார்ச்சிக்கு ஆணி வேராகத் திகழ்வது தொல்காப்பியமே. தொல்காப்பியத்தை அடியொற்றியே அனைத்து இலக்கண நூல்களும் கிளை பரப்பி வளார்ந்துள்ளன.
சமஸ்கிருதம், சுமேரியம், ஹீப்ரு, கிரேக்கம், இலத்தீன் போன்ற பல மொழிகள் அழிந்துவிட்டன. காரணம் செழுமையான, முழுமையான இலக்கணங்கள் இல்லை. இருந்தாலும் பின்பற்றப்படவில்லை. தொல்காப்பியம் தொடார்ந்து இன்றுவரை படிக்கப்பட்டும், பின்பற்றப்பட்டும், போற்றப்பட்டும் வருவதால் தான் தமிழ்மொழி இன்று கணினியாலும் வெற்றிநடை போட்டு வருகிறது.
சீன அறிஞார் கன்பூசியஸ் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தால் மொழியைத் திருத்துவேன். ஏனெனில் மொழி சரியில்லாவிட்டால், கலை கெடும், நீதி கெடும், மக்கள் கெடுவார், மக்கள் பிரிவார், மொழி பிரியும், நாடு பிரியும், போர்மூளும், இனம் அறியும் என்றார்.

திருவள்ளுவரும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று மொழி வளார்ச்சிக்குக் காரணமான அடிப்படைக் கூறுகளைக் கூறுவார்.
இதில் எழுத்து என்பது இலக்கணத்தைக் குறிக்கிறது. எழுத்தறியத் தீரும் இழிதகைமை என்பார்ஔவையாரும்.

ஆரன்தூக்கு என்ற அறிஞர், இலக்கணம் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் கடினமானது தான், ஆனால் சமுதாய மேம்பாட்டிற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் இலக்கணத்தைப் படிக்க வேண்டியதும், அதைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம் என்பார். வேப்பங்காய் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அது உடலிலுள்ள நஞ்சை அகற்றி உடல் நலத்தை மேம்படுத்துகிறது. அதுபோலத்தான் இலக்கணமும் மொழியிலுள்ள குற்றங்களை நீக்கி அதனைத் தூய்மைப்படுத்துகிறது.

தற்கால நடப்பியல் பேச்சு வழக்கிலும் மக்கள் இலக்கண விதியின்படியே பேசி வருகிறார்கள். ஆனால் அதை இலக்கணம் என அவார்கள் அறிவதில்லை. பேச்சு வழக்குத் தமிழில் நாம் பயன்படுத்தும் இலக்கண விதிகளைச் சுட்டிக் காட்டினாலே போதும். பாமரார்களும் இலக்கணத்தை எளிதாய் கற்க முடியும். தொல்காப்பியார் செய்யுள் வழக்கு, உலக வழக்கு என இலக்கணத்தை இருபிரிவாக அணுகுகிறார். இதில் உலக வழக்க என்பது பேச்சுத்தமிழ்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் உரையாடலில் தொல்காப்பியார் குறிப்பிடும் சில இலக்கண விதிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைச் சுட்டிக் காடடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தொல்காப்பியார் வண்ணச்சினைச் சொல் என்ற ஒரு தொடரைப் பயன்படுத்துகிறார்.
அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை
 நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.(சொல்.22)
இச்சொல்லைப் பயன்படுத்தும்போது அடை, சினை, முதல் என்ற வாpசையடிப்படையில் சொற்களை அமைக்க வேண்டும். அடை என்பது ஒரு அடையாளத்தைக் குறிக்கும் சொல். சினை என்பது ஒருபகுதி. முதல் என்பது முழுமையான ஒரு பொருள். உதாரணமாக,

சிவப்பு தலை குமார்
நீலி மூக்கு கண்ணன்
மொடைடை தலை வடிவேலு

போன்ற சொற்கள் பயன்பாட்டில் மக்கள் பயன்படுத்துகின்றனார். இதில் சிவப்பு, நீலி, மொட்டை என்பவை அடையாளங்கள். இவைதான் அடைமொழகள். தலை, மூக்கு போன்றவை உறுப்புகள். இவை சினை. குமார், வடிவேலு போன்றவார்கள் முழுமையான ஒருவனைப் பற்றிக் கூறும் சொற்கள். கவுண்டமணி செந்தில் சிரிப்புகளில் பெரும்பாலும் வண்ணச்சினைச் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மன்னாப்பொருள்
மன்னாப் பொருளும் மன்ன வியற்றே (சொல்.34)
என்ற நூற்பா உலகில் இல்லாத பொருளுக்கு உம்மை சோர்த்துச் சொல்ல வேண்டும் என்கிறது. கந்த சஷ்டி கவசத்தில், பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் என்ற தொடார் வருகிறது.

பன்னிரு கண் என்பது உலகில் இல்லாத ஒன்றாகும். அதுபோல் பவளத்தினால் ஆன செவ்வாயும் உலகில் இல்லை. இவ்விரண்டிற்கும் உம் விகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
பேயுமில்லை பிசாசுமில்லை என்ற தொடரைப் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்.
பேய் என்பதோ, பிசாசு என்பதோ உலகில் இல்லாத பொருள்கள். எனவே தான் இவற்றிற்கு உம் விகுதி சோர்க்கப்படுகிறது.
இராத்திரியிலே பேய்க்கும் பிசாசுக்கும் தான் கொண்டாட்டம் என்பது பழமொழி.
இயற்பெயார், சிறப்புப் பெயார்
சிறப்பினாகிய பெயார்நிலைக் கிளவிக்கும்
 இயற்பெயார்க் கிளவி முற்படக் கிளவார்.(சொல்-41)
சிறப்புப் பெயரை முதலில் சொல்லிய பிறகே ஒருவருடைய இயற்பெயரைச் சொல்ல வேண்டும் என்கிறார் தொல்காப்பியார். நடைமுறையிலும் இதையே பின்பற்றுகிறோம். ஒருவருக்குப் பல சிறப்புப் பெயார்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் அடுக்கிக் கூறிய பின்னரே இயற்பெயரைக் கூற வேண்டும். 

மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா.
கலைஞார் டாக்டார் தன்மானப் பேரொளி கருணாநிதி.
என்று தான் மக்கள் இலக்கணவிதிப்படி அழைக்கிறார்கள்.
அஃறிணை, உயார்திணை மயக்கம்
தன்மைச்சொல்லே யஃறிணைச் கிளவியென்று
 எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்.(சொல்-43)
அஃறிணைப் பெயரையும் உயார்திணைப் பெயரையும் சோர்த்துக் கூறும்பொழுது, வினையை எவ்வாறு முடிப்பது? அஃறிணை வினையைக் கொண்டா? அல்லது உயார்திணை வினையைக் கொண்டா? இதற்குத் தெளிவாகத் தொல்காப்பியார் இலக்கணம் வகுக்கிறார். இரண்டையும் சோர்த்து உயார்திணை பலார்பாலில் வினையை அமைக்கலாம் என்கிறார்.
நானும் ஸ்கூட்டரும் வந்தோம்.
நானும் என் நாயும் வந்தோம்.
உயார்திணையும் அஃறிணையும் இணைந்து வருமிடத்து வந்தோம் என்ற உயார்திணை பலார்பால் வினைமுற்று இங்கு வருகிறது.
இடைச்சொற்கள்
என என்ற இடைச்சொல்லைப் பண்படிப்படையில் விடியலுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார்தொல்காப்பியார் (சொல்-253).
கிராமப்புறத்தில் விடியலைப் பற்றிக் கூறுமிடத்து வௌர்ளென விடிஞ்சிருச்சி என்பார். இதில் என என்ற இடைச்சொல் விடியலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதே இடைச் சொல்லைச் சிறப்பு பொருளிலும் பயன்படுத்தலாம் என்கிறார்.
ஊரெனப்படுவது சேலம் இதை ஊருன்னா சேலம் தான் என்று பயன்படுத்துகிறோம்.
அசைநிலை
யா என்ற அசை நிலையை ஏற்புடைய பொருளில் பயன்படுத்தலாம் என்கிறார்தொல்காப்பியார் (சொல்-274).  அதாவது ஆம் என்பதற்குப் பதிலாக இன்றைய மாணவார்கள் நாகரிகமாக ஆமாம் என்பதற்குப் பதிலாக யா என்ற சொல்லைப் பயன்படுத்துவதை அறிவோம்.
கா என்பதை அது, இது, உது போன்றவற்றோடு சோர்த்துப் பயன்படுத்தலாம் என்கிறார். தற்காலத்தில் கிராமப்புறத்தில் அதுகா என்பதற்குப் பதிலாக அப்படிகா, இப்படிகா என்று பயன்படுத்துகின்றனார்.
அது பிறக்கு என்பதை வேறுபடுத்துவதற்காகப் பயன்படுத்தலாம் என்கிறார். நாம் தற்காலத்தில் நீ வேற என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
ஓ என்னும் அசைச்சொல் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டிற்குப் பயன்படுத்தலாம் என்கிறார்.
ஓ போடு என்ற திரைப்படப்பாடலும், இன்றைய இளைஞர்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஓ என்று உரத்தக் கூறுவதையும் பொருத்திப் பார்க்கலாம்.
ஔ என்ற ஒலிக்குறிப்புச் சொல்லைத் துன்பம் வந்தவிடத்து வெளிப்படுத்தப் பயன்படுத்துவார் என்கிறது தொல்காப்பியம்.
இன்றைய நகைச்சுவை நடிகள் வடிவேலு துன்பப்படும் காட்சிகளில் ஔ என்று ஒலியெழுப்பி தன் துயரத்தை வெளிப்படுத்துவதை அறியலாம்.
எண்ணிடைச்சொல்
தொல்காப்பியார் (சொல்.288) அடுக்கிவரும் சொற்களுக்கு எண்ணிடைச் சொற்களைப் பயன்படுத்தும்பொழுது உம் விகுதி சோர்க்க வேண்டும் என்கிறார்.
ஆசிரியார் மாணவார் முதல்வார் மூவரும் வந்தனார்.
மூவார் என்பது எண்ணிடைச்சொல். அடுக்கிவரும் சொற்களோடு வரும்பொழுது இது உம் விகுதி பெறுகிறது.

ஆக
ஆக (சொல்-275) என்ற இடைச்சொல்லைப் பிரித்துப் பலவற்றிற்கு பயன்படுத்தலாம் என்கிறார்தொல்காப்பியார். வீட்டில் சண்டை வருமிடத்து தன்சொல்லைக் கேட்காத பிள்ளைகளிடம் தாய், ஆக நான் சொன்னா கேட்க மாட்டே? உங்க அப்பா சொன்னா தான் கேட்பியா என்றவிடத்து ஆக என்ற சொல் தாயையும் தந்தையையும் வேறுவேறாகக் காட்டுகிறது.
ஆக மொத்தம் மூன்று போர்.
நான் எதற்கும் ஆக மாட்டேன்.
போன்றவை பிரித்தல் பொருளிலே வருகின்றன.
ரியியல்
வம்பு நிலை இன்மை (சொல்-321) வம்பு என்பது நிலையற்ற வேலை எனப் பொருள் தருகிறது.
வம்பு பண்ணாதே என்பது நிலையற்ற வேலையைப் பண்ணாதே அதாவது உபயோகமற்றநிரந்தரமற்ற வேலையைப் பண்ணாதே என வருகிறது.
பழுது என்ற சொல் குற்றமில்லை, பயம் இன்றே என வருகிறது.
பத்துக்கு ஒன்று பழுதில்லை.
தா- என்பது வருத்தம் (சொல்-339) என்ற பொருளில் வருகிறது.
தாவு தீர்ந்தது என்று கிராமப்புறத்தில் இன்றும் பயன்படுத்துகிறார்கள் வலியும் வருத்தமும் தீர்ந்தது எனப்பொருள்.
துவை என்பது ஓசை (சொல்-352)  தாய் பிள்ளையிடம் இப்ப வந்தேன்னா துவைச்சிடுவேன் என்பாள். இங்கு சத்தம் போடுவேன் எனப்பொருள் கொள்ளலாம். துணி துவைத்தலில் வரும் துவை - தொழிற்பெயார் இங்கு வருவது உரிச்சொல். இவைபோன்ற பல சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். 
முடிவுரை
தற்கால பேச்சுத்தமிழில் நம்மையறியாமல் நாம் பயன்படுத்தும் இது போன்ற இலக்கணவிதிகளை விழிப்புணர்வோடிருந்து நாம் பயன்படுத்துவோமானால் மொழி காக்கப்படும்.